தமிழகம்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்து சென்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்து சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தமிழகத்தில் போட்ப்பட்டு வருகிறது. மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் தமிழகத்தில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி 2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 360 தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது.
இதில் 2 கோடியே 79 லட்சத்து 887 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டில் 53 லட்சத்து 83 ஆயிரத்து 694 டோஸ் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கிய நிலையில், நேற்று கூடுதலாக 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. இதனால் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.