சங்கர க்ருபா கல்வி அறக்கட்டளைக்கு ஒரு கோடி நிதி வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.!

சங்கர க்ருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை பயன்பாட்டுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். காஞ்சி சங்கர மடத்தின் மறைந்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமியின் 87வது ஜெயந்திவிழா நடைபெற்றது.;

Update: 2021-07-27 04:41 GMT

சங்கர க்ருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை பயன்பாட்டுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். காஞ்சி சங்கர மடத்தின் மறைந்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமியின் 87வது ஜெயந்திவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் காணொளி மூலமாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசும்போது, மிகவும் பழங்கால கோயில்கள் நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது எனக்கூறினார்.


இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தலைமையின் கீழ் காஞ்சி மடம் மிகப்பெரிய உயரத்தை எட்டியது. ஆன்மீகம் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு காஞ்சி மடம் சேவை செய்து வருகிறது எனக் கூறினார்.

மேலும், சங்கர க்ருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு ஆளுநர் நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் வழங்கியுள்ளார். ஆளுநர் நிதி வழங்கியமைக்கு காஞ்சி மடம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Tags:    

Similar News