மழைநீர் வடிகால் பணிக்கான பள்ளங்கள் மூட எச்சரிக்கை - தலைமை செயலர் கடிதம்!

மழைநீர் படிக்கால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் விரைவாக மூடப்பட எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறந்த கடிதம்.

Update: 2022-10-27 02:29 GMT

மழைநீர் வடிகால் பள்ளத்தில் உயிரிழந்த நபர்:

சமீபத்தில் தீபாவளி முந்தைய இரவு அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய முத்துகிருஷ்ணன் என்பவர் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவரை அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே விடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழக செயலாளர் எழுதிய கடிதம்:

இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மழைநீர் வடிகால் அல்லது வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பின் அவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். பருவ மழையை முன்னிட்டு தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.


கடிதத்தின் முக்கிய அம்சம்:

பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இத்தகைய பணிகளுக்காக சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளங்கள் மூட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே இவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அல்லது அடையாள எச்சரிக்கை பலகைகள் வைத்து தற்காலிகமாக அவற்றை மூட உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News