தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Update: 2022-04-20 13:10 GMT

தமிழகத்தில் தினமும் 25 என்கின்ற அளவில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் தினமும் கொரோனா தொற்று 2000க்கும் மேல் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தொற்று இல்லாத நாடாக இந்தியா இருந்த நிலையில் தற்போது அதிகரிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்திலும் தற்போது கொரோனா எண்ணிக்கை 25லிருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தொற்று இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News