போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு!

இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காவல், காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள், திருமண நாள் நாட்களில் விடுமுறை வழங்குதல்.;

Update: 2021-07-31 03:00 GMT

தமிழக போலீசாருக்கு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் ஓய்வு அளிக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காவல், காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள், திருமண நாள் நாட்களில் விடுமுறை வழங்குதல்.

காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

காவல் ஆளிநர்கர்களின்  பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும். 


தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சுற்றறிக்கை குறிப்பாணை பெற்றமைக்கு ஏற்பளிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Source: Dgp Press Release

Image Courtesy: Google

Tags:    

Similar News