தஞ்சை: பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை துண்டித்த செவிலியர்.!

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்த 14 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக வெட்டிய செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-08 10:46 GMT

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்த 14 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக வெட்டிய செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாயி கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பிரியதர்ஷினியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 9 மாதங்களிலேயே குழந்தை பிறந்ததால், வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்க தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின்படி குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், குழந்தை நலமானதை தொடர்ந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் நேற்று கூறியுள்ளனர். இதனையடுத்து குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ஊசியை அகற்றுமாறு செவிலியர்களிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ஊசியுடன் பேண்டேஜை கத்தரிக்கோல் மூலம் எடுத்தபோது கட்டை விரலை செவிலியர் தவறுதலாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



 

இதன் பின்னர் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை மீது புகார் தெரிவித்தனர். செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News