முதலமைச்சர் ஸ்டாலின் மீது ஏன் கிளாஸ் எறிந்தேன்: போலீசாரிடம் டீ மாஸ்டர் சொன்ன காரணம்!

Update: 2022-03-08 09:01 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த கான்வாய் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் கிளாஸ் எறிந்தார் என்ற காரணத்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்ட எல்லையில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது காவல்கிணறு அருகே திடீரென்று ஒரு டீ கிளாஸ் முதலமைச்சர் கார் முன்பு விழுந்தது. அதை எறிந்தது டீ மாஸ்டர்தான் என உறுதியானது. இதனையடுத்து அவரை பிடிக்க முயற்சி செய்தபோது பேருந்தில் ஏறி தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி ஒரு வழியாக பாஸ்கர் என்பவரை கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும்போது, கடை முன்பாக போலீசார் டீ விற்பதற்கு தடை செய்தனர். இதனால் தங்களின் வியாபாரம் பாதித்தது. இதனை எதிர்த்துதான் முதலமைச்சர் வாகனம் மீது டீ டம்ளரை எறிந்தேன் என்று கூறினார்.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News