நன்னிலத்தில் கோயிலுக்கு சொந்தமான குளம் மீட்பு!
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமதுவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான குளக்கரையை ஆக்கிரமித்த இடங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமதுவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான குளக்கரையை ஆக்கிரமித்த இடங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.
நன்னிலத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருக்கும், ஸ்ரீமதுவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான குளம் 1.85 ஏக்கள் பரப்பளவில் இருந்துள்ளது. நாளடைவில் அந்த குளத்தின் கரையோரம் வசித்தவர்கள் குளத்தின் மீது வீடு மற்றும் கழிவரை, குளியலறை, சுற்றுச்சுவர் போன்றவற்றை கட்டிக்கொண்டனர். இதனால் குளம் முழுவதும் ஆக்கிரமிப்பால் மறைந்து போனது.
இது பற்றி நன்னிலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீர்நிலைகளை ஆக்கிரமித்த இடங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நன்னிலம் வட்டாட்சியர் பத்மினி தலைமையில், போலீசார் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விரைவில் பழைய மாதிரி குளங்கள் அமைக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamani