தமிழகத்தில் 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இன்று (அக்டோபர் 10) 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். அதன்படி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக போடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கொரேனா வைரஸ் தொற்றின் 3வது அலையை தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். இதனால் தடுப்பூசி போடும் பணியானது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதே போன்று தமிழகத்திலும் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இதனிடையே பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலேயே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்க போடப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இதுவரை 4 ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலமாக பல லட்சம் மக்களுக்கு ஒரே நாளில் போடப்படுகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 12ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 19ம் தேதியும், 26ம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் தடுப்பூசி போடுவதற்கும் மருத்துவர்கள் மற்றும் செவலியர்களுக்கு எளிதாக அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி நடைபெறுகிறது. இதற்காக 30 ஆயிரம் இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டம் மற்றும் பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கடந்த முறையைவிட அதிகமான தடுப்பூசிகள் போடப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Source: Dailythanthi