"வனப்பகுதி நிலத்தை ஈஷா ஆக்கிரமிக்கவில்லை" ஆர்.டி.ஐ. கேள்விக்கு வனத்துறையின் பதிலால் கலங்கிய போராளிகள் !

ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவை வனப்பகுதியில் உள்ள நிலத்தை எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கோவை மாவட்ட வனத்துறை தற்போது ஆர்.டி.ஐ. கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

Update: 2021-12-13 03:07 GMT

ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவை வனப்பகுதியில் உள்ள நிலத்தை எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கோவை மாவட்ட வனத்துறை தற்போது ஆர்.டி.ஐ. கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

கோவையில் வெள்ளங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இதற்கு உலகளவில் இருந்து ஏராளமானோர்கள் வருகை புரிந்து தியானம் யோகா பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதனிடைய ஈஷா யோகா மையம் மற்றும் அறக்கட்டளை சார்பில் வனத்துறையை ஆக்கிரமித்ததாக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இதனிடையே ஈஷா மையம் மற்றும் அறக்கட்டளை வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் கேட்டிருந்தார். இதற்கு கோவை கோட்ட பொது தகவல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் பதில் அளித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் எந்த ஒரு நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானங்கள் வனப்பகுதியில் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி யானை வழித்தடம் கூட ஈஷா யோகா மையத்தில் இல்லை என்ற தகவலை வனத்துறை தெரிவித்துள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: The Hans India


Tags:    

Similar News