திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விமர்சையாக நடந்த கைப்பாரத் திருவிழா!
பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கைப்பாரத் திருவிழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். அங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கிய வாய்ந்தவையாக பங்குனிப் பெருவிழா பார்க்கப்படுகிறது. சுமார் 15 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 5ம் நாளான இன்று (மார்ச் 15) கைப்பார உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதிகமான எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தை தங்களின் உள்ளங்கைகளில் வைத்து பக்தர்கள் தூக்கி வருவதுதான் இத்திருவிழாவில் மிக முக்கியமானவை ஆகும்.
Source, Image Courtesy: News 7 Tamil