3 சிமென்ட் சாலையை போட்ட மாதிரி கணக்கு காட்டிய தி.மு.க. பிரமுகர்: கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி கண்டனம்!
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 4 தெருக்களுக்கு புதிதாக சிமென்ட் சாலை அமைப்பதற்காக ரூ. 17,00,000 மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 2021 - 2022 ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனிடையே அச்சாலைகள் போடுவதற்கான ஒப்பந்தத்தை, அப்பகுதி தி.மு.க. முக்கியப்புள்ளி ஒருவர் எடுத்துள்ளார். ஒப்பந்தப்படி ஒரு சாலை மட்டும் அமைத்து விட்டு மற்ற தெருக்களில் சிமென்ட் சாலை போடாமலேயே அச்சாலைகள் முடிவு பெற்றதாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. அப்பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக போர்டு ஒன்றும் வைத்துள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், புகாரின் மூன்று சாலைகள் போடப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. அதற்கான பணம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடம் இருந்தே பெறுவதற்கான வேலைகள் நடைபெறுவதாக அரசு சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் போடத சாலைக்கு பணம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் தி.மு.க.வினரால் அரங்கேறியுள்ளது.
Source, Image Courtesy: Vikatan