விஜயதசமிக்கு கோயில்கள் திறப்பதை தமிழக அரசே முடிவெடுக்கலாம்: உயர்நீதிமன்றம்!

விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில்களை திறப்பது பற்றி தமிழக அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Update: 2021-10-12 12:03 GMT

விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில்களை திறப்பது பற்றி தமிழக அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்ற வகையில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வருகின்ற 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய தினமாகும். எனவே வெள்ளிக்கிழமை கோயில்களை திறப்பதற்கு உத்தரவுவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 12) நடைபெற்றது. அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிக்க வேண்டிய தளர்வுகள் பற்றி முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன் நாளை (அக்டோபர் 13) ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விஜயதசமிக்கு கோயில்களை திறப்பது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கட்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News