ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. விவசாயிகளை மகிழ்வித்த முதலமைச்சர்.!
ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. விவசாயிகளை மகிழ்வித்த முதலமைச்சர்.!
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், சில முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை தமிழகத்தில் விவசாய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தேர்தலுக்காக அல்ல, மக்களின தேவைகளுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.