நெல்லை கல்குவாரி விபத்தால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியான பரிதாபம்!

Update: 2022-05-18 11:11 GMT

கல்குவாரி விபத்தால் பலரது வாழ்க்கை நிர்முலமாக்கிய பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு இன்றி உறங்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலம், கல்குவாரி என்று கண்ணீரோடு புலம்பி திரிந்தபடி காத்திருக்கும் உறவினர்களின் எதிர்காலத்தை நினைத்து தனது குடும்ப பொறுப்பை ஏற்பதற்காக 11ம் வகுப்பு தேர்வு எழுதிய மகன். இந்த புகைப்படம் பலரது மனதை உருக வைத்தது.

நெல்லை, பொன்னாக்குடி அருகே அருகே அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்த விபத்தில் 6 பேர் சிக்கியதாக கூறினர். இதனால் அங்கு மீட்பு பணிகள் மிகவும் தொய்வு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் பலர் கண்ணீர் வடித்தபடி இருந்தனர். 6 பேரில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர்களான ராஜேந்திரன், செல்வகுமார் இருவரையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 5வது நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை மீட்கின்ற வேளையில் தீயணைப்புத்துறை ஈடுபட்டுள்ளது.

இதனிடையே ராஜேந்திரன், செல்வகுமார் உள்ளிட்ட இருவரையும் விரைவாக மீட்க வலியுறுத்தி அவர்களின் குடும்பத்தார் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போன்று விபத்தில் சிக்கியுள்ள ராஜேந்திரன் மனைவி மணிமேகலை, நெல்லை ஆட்சியரை சந்தித்து தனது 10 வயது மகள் மற்றும் சகோதரர்களுடன் வந்திருந்தார். அவர்கள் பாறை இடுக்குகளில் சிக்கிய கணவரின் கதி என்னவென்று தெரியாமல் உள்ளது. எனவே உடனடியா மீட்க வலியுறுத்தி அங்குள்ளவர்களின் கால்கலில் விழுந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News