திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி இல்லை.!

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.;

Update: 2021-07-16 05:41 GMT

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.


இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News