POSOCO மையத்திடம் இருந்து மின்சாரம் வாங்க, விற்க தமிழகத்திற்கு தடை: ஏன்?

மின்சார பரிமாற்ற மையத்திடம் இருந்து மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-20 00:11 GMT

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் மின்சார பரிமாற்றம் மையத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்கவும் விற்கவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் பாக்கி தொகையை வசூல் செலுத்த தவறியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் பாக்கி தொகையை செலுத்த தவறியதன் காரணமாக நம்முடைய தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் மின்சாரப் பரிமாற்றம் இருந்து மின்சாரத்தை தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மின்சார பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் தலைவர் நரசிம்மன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற கட்டணமாக 5,100 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த தொகையை திரும்ப செலுத்தாத வரை நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் இத்தகைய மாநிலங்களுக்கு தகுதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 


பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகை செலுத்தாத காரணத்தினால் கால அவகாசம் கடந்த பின்பும் அதனைத் திரும்பச் செலுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாநிலங்களில் மின்சாரக் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த கூறப்பட்டுள்ளது இருந்தாலும் தமிழகத்தின் மீன் கடை பாக்கி 200 கோடி ரூபாய்க்கு குறையும் என்றும், அது ஒரு சில நாட்களில் செலுத்தப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News