தோட்டத்தில் வேலை செய்த விவசாயிகளை தாக்கிய கரடி!
ஆண்டிப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கிய சம்பவத்தில் இரண்டு விவசாயிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கிய சம்பவத்தில் இரண்டு விவசாயிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி மலையடிவாரத்தில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், மலைப்பகுதியில் இருந்து கரடி ஒன்று தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. வேலை செய்து வந்த விவசாயி பொம்மையன் என்பவரை தாக்கியுள்ளது. இதனால் அலறிதுடித்த பொம்மையன் சத்தம் கேட்கவே மணி என்ற விவசாயி சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவரையும் கரடி தாக்கிவிட்டு மலைப்பகுதிக்கு ஓடியுள்ளது. இதனால் இரண்டு பேரும் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து சக விவசாயிகள் தேனி அரசு மருத்துவமனையில் இரண்டு பேரையும் அனுமதித்துள்ளனர். தோட்டத்தில் வேலை செய்துவந்த விவசாயிகளை கரடி தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மலையில் இருந்து விவசாய நிலங்களுக்கு வனவிலங்குகள் வராமல் இருப்பதற்கு வேலி அமைத்துதர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: News 7 Tamil
Image Courtesy:Dinakaran