அசத்தலான திட்டத்தை அறிவித்த பிரதமர்! அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே தமிழகத்தில் செயல்படுத்திக்காட்டிய மத்திய அமைச்சர்!

Union minister Murugan appeals to public to get vaccine promptly and follow Covid-19 protocol

Update: 2021-11-08 01:30 GMT

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் சென்னையில் தொடங்கி வைத்தார்.  கோயம்பேடு அருகேயுள்ள, சேமாத்தம்மன் நகர், பிருந்தாவன் நகர், ஸ்ரீ ஐயப்பா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசியை வீடு வீடாகச் சென்று மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடமும்  பிரதமர்நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக இங்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார்.

தமிழகத்திற்கு 6.32 கோடி தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசிடமிருந்து வழங்கப்பட்டுள்ளன. இதில் 5.94 கோடி தடுப்பூசி டோஸ்கள் அதாவது 94 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோரில் 71 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியையும், 32 சதவீதம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர். இரண்டாம் தவணைத் தடுப்பூசிச் செலுத்த வேண்டியவர்கள் 65 லட்சம் பேர் உள்ளனர் என்பதை கவனத்தில்கொண்டு அவர்கள் உடனடியாக காலதாமதமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பண்டிகைக் காலம் என்பதால் அதிகக் கவனத்துடன் நாம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் தவணையை 100 கோடி பேருக்கு மேல் செலுத்தி உலகிலேயே முதன்மை நாடாக இந்தியா இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News