விரைவில் வைகை ஆற்றங் கரையோரம் வர இருக்கும் பூங்கா: தமிழ் வைகை பூங்கா?
விரைவில் மதுரையில் வைகை ஆற்றங்கரை ஓரம் தமிழ் வைகை பூங்கா வரை இருக்கிறது.
மதுரையில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் தற்பொழுது வைகை கரையோரம் தமிழ் வைகை பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை தமிழ் சங்க இலக்கியங்களில் பெருமைகளை எடுத்துரைக்கும் வைகையின் பெருமைகளை எடுத்துரைக்கும் நோக்கில் இவை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது. மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள வைகை கரையில் ஒட்டி சுமார் 110 கிலோமீட்டர் நீளமும், 12 கிலோமீட்டர் அகலமும் கொண்ட தமிழ் வைகை பூங்கா ஒன்று கட்டப்பட்ட வருகிறது.
இந்த தமிழ் பைக்கில் பூங்காவில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பாடல்களும், வைகை ஆற்றின் பெருமை ஆற்றின் பரணித்தையும் அழகையும் எடுத்துரைத்த இலக்கியங்களையும் அதை அழகாக எழுதிய புலவர்கள் பற்றி குறிப்புகளும் இந்த பூங்கா முழுவதும் உள்ள கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டு இருக்கிறது. இவை கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வரும் பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த பூங்கா முழுவதும் பசுமையான அழகிய மரங்கள் புல் வெளி தரைகள் நடை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பசுமையான மரங்களுக்கு இடையே மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சிறு வேலைகள் பாக்கி இருப்பதால் இவை தற்போது திறக்கப்படாமல் இருக்கிறது. கூடிய விரைவில் இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூங்கா திறக்கப்பட்டால் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் முதல் இயற்கை சூழ்நிலையை ரசிக்கும் படியான நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஆற்றின் பெருமையை தெரிந்து கொள்ளவும் நல்ல முயற்சியாக இருக்கும்.
Input & Image courtesy: News 18