சாராயம் விற்றதாக வழக்கு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பனைத்தொழிலாளர்கள்!

Update: 2022-03-22 14:23 GMT

சாராயம் விற்றதாக பனைத்தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூரை அருகே பூரி குடிசை பகுதியில் 700க்கும் அதிகமான பனையேறி குடும்பங்கள் காலம், காலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பதநீர் இறக்குதல், கருப்பட்டி செய்தல், பனை ஓலையில் பொருட்கள் செய்தல் உள்ளிட்டவைகள் மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கள் சட்டப்பூர்வமாக இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பலமுறை போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால் பூரி குடியை பகுதியில் கள் இறக்கப்படுவதை மாற்றி கள்ளச்சாரயம் காய்ச்சிவதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் பனையேறிகள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News