மாசு கட்டுப்பாடு என்ற பெயரில் விநாயகர்சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் அறிவித்த தி.மு.க அரசு
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடிவு செய்துள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
இன்னும் இரண்டு வாரங்களில் நாம் அனைவரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருக்கிறோம். எனவே நெருங்குகிற கொண்டாட்டங்களுக்கான பல்வேறு ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கும், அந்த கொண்டாட்டம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்குமாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். மேலும் மக்களிடம் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளை அலங்கரிக்க உதிர்ந்த மலர்கள், வைக்கோல் போன்றவற்றையும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரத்தினால் ஆன இயற்கை பொருட்களையும் பயன்படுத்தலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மற்றும் மக்கக்கூடிய நச்சு கலப்படமற்ற இயற்கை ரசாயனங்களை மட்டுமே சிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பல்வேறு மக்கள் சிறப்பாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், பண்டிகைகளை கொண்டாடவும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை திசை திருப்ப தி.மு.க அரசு முயல்கிறது என இந்து மக்கள் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Input & Image courtesy:Polimer News