விநாயகர் சிலை வைக்க ஜமாத் கமிட்டியிடம் அனுமதி கடிதம் - கொதிக்கும் இந்துமத மக்கள்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை அமைக்க ஜமாத் கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டுமா?

Update: 2022-08-30 01:33 GMT

கோயம்புத்தூரில் சேர்ந்த உக்கடம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு காலடியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். எங்கள் காலனியில் குடியிருப்பவர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு விநாயகர் சிலையை அமைத்தும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் முடிவு செய்துள்ளார்கள்.


எனவே தங்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அந்த காலணி ஆனது இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். மேலும் இதற்கு ஆஜரான போலீஸ் தரப்பு வக்கீல் கூறுவது என்னவென்றால், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் விநாயகர் சிலை அமைப்பதற்கு அங்கு பண்டிகை கொண்டாடுவதற்கும் இரு தரப்பின் இடையே விவாதம் ஏற்படும் என்று விளக்கினார். காவல்துறையினர் இந்த விழாவில் ஒரு தரப்பினரை மட்டும் ஆதரிப்பது சரியான வகையில் இருக்காது என்றும் அவர் கூறினார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குடியிருப்பு காலனியில் உள்பகுதியில் மட்டும்தான் விநாயகர் சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும், சிலை ஊர்வலம் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறார். மேலும் இஸ்லாமியர்கள் சமூகத்தை சேர்ந்த ஜமாத் கமிட்டி இடம் இது பற்றி தாங்கள் அனுமதி கேட்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். அனுமதி கடிதத்தை உரிய காவல்துறையில் சமர்ப்பித்து விழா நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளையும் தகுந்த முறையில் காவல்துறை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சார்பில் கூறப்பட்டிருந்தது.

Input & Image courtesy: Thamarai TV News

Tags:    

Similar News