சிலை திருட்டு... ஈடுபட்ட அரசு அதிகாரி... நடவடிக்கை எடுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்!
சிலை கடத்தல் வழக்கில் தற்பொழுது அரசு அதிகாரியான வட்டார கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்து இருக்கின்ற வட்டாத்தி கோட்டை போலீஸ் சிரகத்திற்கு உட்பட்ட பல்வேறு கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக இங்கு உள்ள குறிஞ்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் அமைந்து இருக்கிறது. இந்த கோவிலில் இருந்த கருங்கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் மூசிகம் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் யாரோ திருடி சென்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பாக கோவில் செயல் அலுவலர் சக்திவேல் இது குறித்து போலீசில் புகார் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன் அடிப்படையில் பட்டுக்கோட்டையை அருகே இருக்கின்ற செல்லதுரை என்பவர்.
இவர் அதிகாலை சுவாமி சிலைகளை திருடி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு போவது பதிவாகி இருக்கிறது. குறிப்பாக இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் திருவாரூர் மாவட்டம் வட்டார கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. எதற்கு அவர் சிலையை திருடி சென்று இருப்பார்? என்பது குறித்து விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar