புலிகள் சரணாலயத்தில் கோவில் திருவிழா: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
புலிகள் சரணாலயத்தில் கோவில் திருவிழா குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு..
புலிகள் சரணாலயத்தில் கோவிலில் திருவிழா:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள கோவிலில் திருவிழாவை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. சத்திய மங்கலம் புலிகள் சரணாலயத்தில் ஆதிகரு வன்னராயர் பொம்மையர் கோவில் உள்ளது. இங்கு வருடா வருடம் மாசி பௌர்ணமி தினத்தில் இந்த கோவில் திருவிழா நடக்கும். இந்த கோவில் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதும் வழக்கம். புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் தற்போது வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு:
இந்த வழக்கை கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார். அவர் பதிவு செய்த மனுவில் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளும் எண்ணிக்கையை நிர்ணயிக்கவும், அதற்கு அதிகமான பெயரை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோரின் முன்னிலையில் அமர்விற்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான சொக்கலிங்கம் வழக்கறிஞர் திருவிழாவின்போது ஏராளமான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசுபாடு ஒலி மாசுபாடு ஏற்படுகிறது.
அரசுக்கு இரண்டு வார கால அவகாசம்:
விழாவில் பலியிடப்படும் விலங்குகளின் கழிவுகள் அப்படியே விட்டு செல்வதாகவும், விறகுகளை பயன்படுத்தி சமையல் செய்வதாகவும் மாசு ஏற்படுகிறது என்று வாதிட்டார். அரசு தரப்பில் முத்துக்குமார் ஆஜராகி, விழாவிற்கு 50,000 பெயர் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். விழாவை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த விழா குறித்து மனு தாக்கல் செய்ய அரசுக்கு இரண்டு வார கால அவகாசத்தை விடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Input & Image courtesy: Dinamalar