கோயிலில் இருந்த நடராஜர் சிலையை திருடிய வாலிபர் கைது!

Update: 2022-05-08 02:13 GMT

தேனி மாவட்டம், அன்னஞ்சியில் காவல் நிலையம் அருகே ஆதிநாராயணன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் கடந்த 30ம் தேதி முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் நுழைந்தனர். அப்போது கோயிலில் இருந்த பூசாரி ராஜாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த சாவியை பிடுங்கி, கோயிலை திறந்துள்ளனர். அவர் சத்தம் போடவே, மண்பத்தில் தூங்கியிருந்த பத்மநாபன் என்பவர் ஓடிவந்துள்ளார். அவரையும் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் கோயிலில் இருந்த 2 வெண்கல நடராஜர் சிலைகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் தூக்கிக்கொண்டு தப்பியோடினர். இது பற்றி அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே கோயில் அருகாமையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ததில் குற்றவாளி ஒருவரின் முகம் மட்டும் அடையாளம் காணப்பட்டது. அவர் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நடராஜின் மகன் சரவணக்குமார் 22, என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சமீபகாலமாக கோயில்களில் கொள்ளையடிப்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News