கோவாவை அவமதித்த தமிழக நிதியமைச்சர் - மாநிலங்களுடனான நல்லுறவை கெடுத்துக்கொள்ளும் தி.மு.க?

Update: 2021-05-30 08:16 GMT

டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அங்கும் இந்த குணத்தைக் காட்டி கோவா சார்பில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர், மாவின் கோடின்ஹோவை "வாயை மூடிக் கொண்டு இருங்கள்" என்ற ரீதியில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கோடின்ஹோ பேசிய போது, சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது என்று தியாகராஜன் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தியாகராஜனின் பேச்சு, தான் பெரிய மாநிலத்தில் இருந்து வருவதால் தனது கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று உணர்த்துவது போல் இருந்ததாகவும், நீங்கள் சிறியவர்கள் வாயை மூடுங்கள் என்ற ரீதியில் அவர் பேசியது ரசிக்கத்தக்கதாக இல்லை என்றும் கோடின்ஹோ கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை சந்திக்கும் சிறிய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கோடின்ஹோ கோரிக்கை வைத்ததற்கு தியாகராஜன் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. "என் தொகுதியே கோவா அளவுக்கு பெரிது. எனவே ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகளில் தலையிட தமிழ்நாட்டுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும்" என்று தமிழக நிதியமைச்சர் பேசியதாக கோடின்ஹோ தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து ஜி.எஸ்.டி கவுன்சில் பாகுபாடு பார்க்க முடியாது என்றும் தியாகராஜன் இவ்வாறு பேசியது கோவாவை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்ததாகவும் இதற்கு மன்னிப்பு கேட்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது நிதி அமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும் கோவா போக்குவரத்து துறை அமைச்சர் கோடின்ஹா கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகளில் பங்குபெற சமமான உரிமை உள்ளது என்றும் எல்லா முடிவுகளுமே ஒப்புதலின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என்றும் சுட்டி காட்டியுள்ளார்.

Tags:    

Similar News