நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு!! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

Update: 2026-01-29 13:12 GMT

உச்ச நீதிமன்றம்  திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறப்படும் போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட பொதுநல மனுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ஜி.எஸ். மணி தாக்கல் செய்த பொதுநல மனுவின் பேரில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்காக அவர்களை வீதிப் போராட்டங்கள், அரசியல் அழுத்தம் அல்லது சமூக ஊடக மிரட்டல்களுக்கு உள்ளாக்க முடியாது என்றும், ஒரு நீதித்துறை முடிவுக்கு எதிராக மேல்முறையீடு, மறுஆய்வு அல்லது பிற சட்டப்பூர்வ நடைமுறைகள் மட்டுமே அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தீர்வு என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News