கூட்டணி விவாதத்தை தவிர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய திமுக!!

Update: 2026-01-30 06:22 GMT

திமுக, காங்​கிரஸ் கட்​சி​களின் நிர்​வாகி​கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கட்சி நிர்​வாகி​கள் பொது​வெளி​யில் கூட்​ட​ணி, தொகு​திப் பங்​கீடு மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யினர் ஆகியவற்றை குறித்து விவா​திப்​பதை தவிர்த்துக் கொள்ளுமாறு திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி அறிக்​கை​யில் தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற விவாதங்களால் ஏற்படும் சர்ச்​சையால் எந்தவித பயனும் இல்லை என்றும், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் தேர்தலில் வெற்றியடைவதை குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி குறித்த முடிவுகளை விரைவில் கட்சியின் முக்கிய தலைவர்கள் எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News