தி.மு.க கூட்டணியில் தொடர் இழுப்பறி! அடம் பிடிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சி!

Update: 2021-03-09 04:10 GMT

தற்போது வரையில், தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றது.

இதில், ஆதித்தமிழர் பேரவை, தமிழகத்தில் 1சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்தில் 1 சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து மக்கள் விடுதலைக் கட்சி தமிழகத்தில் 1 சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடு ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தை எட்டப்பட்டுள்ள நிலையில், கொங்கு மக்கள் தேசிய கட்சியுடன் மட்டும் இன்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், சாதாரண லெட்டர்பேட் கட்சி ஆதரவு தெரிவித்தாலும், அதனை வரவேற்க தயார் நிலையில் உள்ளது திமுக. 



Similar News