அடுத்தது காசி தான்.! தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம்- கொண்டாட்டத்தில் இந்துக்கள்.!

Update: 2021-04-10 02:03 GMT

காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதை கொண்டாடும் விதமாக இந்துக்கள் ட்விட்டரில் KashiMathuraisours, Mosque, Aurangzeb, #KashiVishwanath, #Mugha

என்பது போன்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.



பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி பகவான் சிவனை நோக்கி பார்ப்பதுபோல் காட்சியளிப்பார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்தி பகவான் மட்டும் கோவில் அருகே இருக்கும் ஞான்வாபி மசூதியை நோக்கி பார்த்துக் கொண்டிருப்பார். ஏன் இங்கு மட்டும் இவ்வாறு உள்ளது என்று வரலாறு படித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். முகலாயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்த போது இந்து கோவில்களை சூறையாடுவது, இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

முகலாய வம்சத்தில் வந்த அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு ஞான்வாபி மசூதியை கட்டியுள்ளார். பிறகு முகலாயர் வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் மசூதி அருகில் கோவில் ஒன்றை இந்துக்கள் கட்டியுள்ளனர். இதன் காரணமாக தான் நந்தி மசூதியை பார்த்து இருப்பது போல் அமைந்துள்ளது. இதனை பார்க்கும் போது பக்தர்களுக்கு நந்தி தனது கடவுள் தன் முன் தோன்றி காட்சி அளிப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பது போல் ஒரு எண்ணம் ஏற்படும்.

வாரணாசியில் வழக்கறிஞர் வி.எஸ்.ரஸ்தோகி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்ர். அதில் "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காசி விஸ்வநாதர் கோவிலை முகலாய அரசன் அவுரங்கசீப் இடித்துவிட்டு அங்கே மசூதி ஒன்றை கட்டியுள்ளார். இது வரலாற்று உண்மை. இந்த மசூதி இருக்கும் இடத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்தினால் இங்கு கோவில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கும். இந்தக் கோவிலை இடிக்கும் போது இங்கு இருந்த விஸ்வநாதர் லிங்கம் இங்கேயே புதைக்கப்பட்டுள்ளது. எனவே தொல்பொருள் ஆய்வு நடத்தி கோவிலை மீட்டெடுக்க வேண்டும் " என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு மசூதி இருக்கும் இடத்தில் தொல்பொருள் ஆய்வு நடத்தலாம் என்றும், தொல்பொருள் ஆய்விற்கு செலவாகும் நிதியை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மசூதி இருக்கும் இடத்தில் கோவில் இருப்பது வரலாற்று பூர்வமான உண்மை என்பதால் கோவில் இருந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து #KashiMathuraisours, Mosque, Aurangzeb, #KashiVishwanath, #Mughal என்பது போன்ற ஹாஸ்டாக்குகள் சமூக ஊடகங்களில் தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. ஞான்வாபி மசூதியின் கீழ் காசி விஸ்வநாதர் கோவில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் என்பதால் அதனை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று இந்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Similar News