கொரோனா தொற்று காரணமாக உலகின் மிகப்பெரிய கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா முதல் அலையை போலவே இரண்டாவது அலையும் உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால் பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அந்த நாட்டில் 3,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நாட்டில் தான் உலகிலேயே மிகவும் பெரிய இந்துக் கோவிலாக இருக்கும் அங்கோவார்ட் கோவில் உள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி தமிழ்நாட்டில் கோவில் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. பொதுவாக சித்திரை மாதங்களில் பல்வேறு கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மதுரையில் நடக்கும் சிதாஇரைத் திருவிழா இதில் மிகப் பிரசித்தம்.
தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்ததால் மதுரை சித்திரைத் திருவிழாவும் தடைபட்டுள்து. இதனால் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறாமல் தடைபட்டது போலவே இந்த வருடமும் திருவிழா கொண்டாட முடியவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தேர்தலுக்காக பல லட்சம் பேர் பிரச்சாரக் கூட்டங்களில் கூடிய போது பரவாத கொரோனா வைரஸ் சித்திரைத் திருவிழாவில் பரவிவிடுமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு திருவிழாவை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.