கேரளா அரசு செய்யும் மிகப் பெரிய தவறு !

கடல் மண்ணால் ஆன பொம்மை இந்த கொரோனா இரண்டாம் அலையால் உடைந்ததை நாடே உற்று நோக்கி வருகிறது.

Update: 2021-08-07 23:45 GMT

கொரோனாவின் முதல் அலையின் போது நாடு முழுவது  இடது சாரிகளும், மத்திய அரசை எதிப்பவர்களும் ஒன்றாக கைகோர்த்து " கேரளா மாடல் " என்ற கடல் மண்ணால் ஆன பொம்மையை உருவாக்கினார். அதாவது இந்த கொரோனா பெருந்தொற்றை   கேரள மாநிலத்தை ஆளும் இடது சாரி அரசு, முழுவதும் கட்டுப்படுத்திவிட்டதாக  ஒரு கூட்டமே அந்த  கடல் மண்ணால் ஆன பொம்மையை பாதுகாத்துவந்தது.  

ஆனால் தற்போது நாடு முழுவதும் இரண்டாம் அலையை கட்டுப்படுத்திவிட்டு மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்செரிக்கை எடுத்து வரும் வேலையில். இன்னும் அந்த " கேரளா மாடல் " இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது. 

ஆகையால் அந்த கடல் மண்ணால் ஆன பொம்மை இந்த கொரோனா இரண்டாம் அலையால்  உடைந்ததை நாடே  உற்று நோக்கி வருகிறது.

இந்த நிலையில்,  

 கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கேரள அரசு கோவிட் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கேரள மதுபான கழகத்திற்கு சொந்தமான 150க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை சனி, ஞாயிறு மட்டுமின்றி விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கட்டுப்பாடுகளுடன் திறந்து பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சனிக் கிழமைகளிலும் அரசுக்கு சொந்தமான மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

'கேரளாவில் தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. மதுக் கடைகளைத் திறந்தால் கோவிட் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்' என, மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Dinamalar

Image Source : Down to earth.

Tags:    

Similar News