ஐந்து ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது வாழ சிறந்த இடம் இந்தியா - 68% இளங்கலை மாணவர்கள் கருத்து.!
இந்திய மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கு (68 சதவீதம்) பேர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது, இந்தியா வாழ ஒரு சிறந்த இடம் என்று கருதுகின்றனர்
80 சதவீத இந்திய இளங்கலை மாணவர்கள் தங்கள் எதிர்கால நிதிநிலைமை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய "உலகளாவிய மாணவர் கணக்கெடுப்பு" தெரிவித்துள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 21 நாடுகளில் இந்தியா தான் இரண்டாவது மிக அதிக நம்பிக்கையுள்ள மாணவர்களைக் கொண்டுள்ளது. சீனாவும் கென்யாவும், கூட்டாக 84 சதவீதம் பெற்று முதல் இடத்தில உள்ளனர்.
கல்வி தொழில்நுட்ப நிறுவனமான Cheggன் இலாப நோக்கற்ற பிரிவான Chegg.org வெளியிட்டுள்ள கண்டுபிடிப்புகளின் படி, கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, 54 சதவீத இந்திய மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தை அதிக ஆன்லைன் கற்றலின் மூலம் இணைக்க விரும்புகிறார்கள், இது கனடாவில் (54 சதவீதம்), சவுதி அரேபியா (78 சதவீதம்), சீனா (77 சதவீதம்) மற்றும் தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா (இரண்டும் 57 சதவீதம்) ஆகியவற்றிற்கு பின்னால் உள்ளது.
உயர்கல்வியில் ஆன்லைன் கற்றலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும்போது, கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு (65 சதவீதம்) மாணவர்கள் குறைந்த கல்விக் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு இருந்தால், தங்கள் பல்கலைக்கழகத்தில் அதிக ஆன்லைன் கற்றலைத் தேர்வு செய்ய விரும்புவதாகக் கூறுகின்றனர்.
இந்திய மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கு (68 சதவீதம்) பேர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது, இந்தியா வாழ ஒரு சிறந்த இடம் என்று கருதுகின்றனர், இது சீனா (92 சதவீதம்) மற்றும் சவுதி அரேபியா (77 சதவீதம்) க்கு அடுத்தபடியாக உள்ளது. அர்ஜென்டினா மாணவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் நாடு வாழ சிறந்த இடம் என்று கருதுகின்றனர், இதுவே வாக்களிக்கப்பட்ட எல்லா நாட்டிலும் மிகக் குறைவு.
மேலும், இந்திய மாணவர்களில் 84 சதவிகிதத்தினர், 35 வயதிற்கு முன்னர் தங்கள் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறார்கள், இது கென்யா (92 சதவீதம்) மற்றும் இந்தோனேசியா (86 சதவீதம்) க்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஒப்பிடுகையில், ஜப்பானிய மாணவர்களில் 31 சதவீதம் பேர் மட்டுமே 35 வயதிற்குள் சொந்த வீடு கனவு நிறைவேறும் என்று நம்புகிறார்கள், இது தான் கணக்கெடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் மிகக் குறைவு.