ராகுல் காந்தியால் தடைபட்ட கோவில் உழவாரப்பணி- பக்தர்கள் வேதனை.!

Update: 2021-03-01 01:15 GMT

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் மற்றும் கேரளாவிற்கு வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் உழவாரப்பணி பாதிக்கப்பட்டுள்ளதாக உழவாரப் பணியில் ஈடுபடும் அடியார்களும் பக்தர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு சாமி தரிசனம் செய்தார்.

நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கோவில் வளாகத்தில் உழவாரப் பணிகள் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி நேற்று கோவிலுக்கு வருகை தந்ததால் மாதம் தோறும் நடக்கும் உழவாரப்பணிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இது அடியார்கள் மற்றும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதத்தில் ஒரு நாள் நடக்கும் உழவாரப் பணியை சில மணி நேரம் வந்து செல்லும் ராகுல்காந்திக்காக தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்து முன்னணியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை அறநிலையத்துறை சரிவர கவனிக்காமல் இருக்கும் நிலையில் பக்தர்களை கொண்டு உழவாரப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதையும் தடை செய்து அடியார்களின் பணியை கொடுப்பதா என்று இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.





ராகுல் காந்தி தன்னை ஒரு கவுல் பிராமணர் என்று கூறிக்கொண்ட போதும் இந்து மத வழக்கங்களைப் பற்றி அறியாதவராகவே இருக்கிறார். மேலும் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களை போன்று அவர் பாதிரியார்களிடம் ஆசி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப்படிப்பட்ட ஒருவருக்காக கோவில் பணியை கெடுப்பது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News