தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய-ரஷ்ய ராணுவம் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை!

Update: 2021-07-29 12:30 GMT

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ராணுவ பயிற்சியின் 12 வது பதிப்பான 'EX INDRA 2021' வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ராஷ்யாவிலுள்ள  உள்ள வால்கோகிராடில் நடைபெற உள்ளது.


இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் 250 ராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக காலாட்படை பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர்.


இந்திய மற்றும் ரஷ்ய ராணுவத்துக்கு இடையேயான இயங்கு தன்மை மற்றும் பரஸ்பர தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளின் ராணுவப் படைகளுக்கிடையே சிறந்த செயல்முறைகளை பகிர்ந்துகொள்ளவும்  'EX INDRA 2021' கூட்டு ராணுவ பயிற்சி உதவிகரமாக இருக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Source: Daily thanthi, Indian Army.

Tags:    

Similar News