இந்தியாவிற்கு அடுத்த பதக்கம் உறுதியா?அரையிறுதியில் இந்தியாவின் லவ்லீனா!

ஒலிம்பிக்கின் குத்துசண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதன் காரணமாக இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது.

Update: 2021-07-30 09:27 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று (ஜூலை 30) மகளிருக்கான குத்துச்சண்டையின் 64-69 கிலோ எடைப்பிரிவிற்கான காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா, சீனாவை சேர்ந்த தைபேயின் சின்-சென் நியென்னை எதிர்கொண்டார்.  


இந்த காலிறுதி குத்துச்  சண்டை போட்டியில் துவக்கம் முதலே இந்தியாவின் லவ்லினா ஆதிக்கம் செலுத்தி தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இறுதியில் இந்த போட்டியில் 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனை அடுத்து இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை லவ்லினா உறுதி செய்துள்ளார்.


இவ்வாறு இருக்கையில் லவ்லினா வின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ள நிலையில், தற்போது லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் 2வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை லவ்லினா உறுதி படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News