2000 ரூபாய் நோட்டுகளை தபாலில் அனுப்பி வங்கி கணக்கில் செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி

2000 ரூபாய் நோட்டுகளை நேரில் செலுத்த முடியாதவர்கள் தபால் மூலம் அனுப்பி வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Update: 2023-11-04 07:01 GMT

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி  வங்கிகளில் மாற்றுவதற்காக செப்டம்பர் 30-ஆம் தேதி வரை காலகெடு வழங்கியது. பின்னர் அக்டோபர் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது .அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்கள் மூலம் இந்த நோட்டுகளை மக்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம் என அறிவித்தது. இந்த அலுவலகங்களில் இருந்து தூரத்தில் வசிப்பவர்களுக்கு தற்போது மேலும் ஒரு சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது .


அதாவது 2000 ரூபாய் நோட்டுகளை பதிவு தபால் உள்ளிட்ட உறுதி செய்யப்பட்ட வழிகள் மூலமாக மேற்படி அலுவலகங்களுக்கு அனுப்பி மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மக்களுக்கு சிரமம் இன்றி மேற்படி நோட்டுகளை மாற்ற வடிவமைக்கும் என டெல்லி மண்டல இயக்குனர் ரோகித் பி.தாஸ் தெரிவித்தார். முன்னதாக புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளில் 97 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்திருப்பதாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Similar News