உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் -ஐ.எம்.எஃப் கணிப்பு!
உலக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா அடுத்த இந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் எப்போதும் மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வேளையில் அண்மையில் வெளியான ஐ.எம்.எப் கணிப்பு மொத்த கதையையும் மாற்றியுள்ளது. ஐ.எம்.எப் வெளியிட்ட கணிப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று கணித்துள்ளது.இந்தியாவுடன் சேர்ந்து சீனா ,அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் பெரும் பங்கீட்டை கொண்டு இருக்கும் என தெரிவித்துள்ளது .
ஆனால் எந்த அளவு என்பதில் தான் அதிர்ச்சி.இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நான்கு நாடுகள் அடுத்த ஐந்து வருடத்தில் பதிவாகும் உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்தில் பாதிக்கும் அதிகமான பங்கை கொண்டிருக்கும் என்று ஐ.எம் எப் எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ல் செப்டம்பர் மாதம் ஐ.எம்.எப் அமைப்பு செய்த இதே போன்ற கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில் அதிக ஜி.டி.பி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பிற நிறுவனங்கள் செய்த சமீபத்திய கணிப்புகளுடன் ஒத்து போகிறது. இந்த கணிப்புகள் அனைத்தும் இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியை காணும் என்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.
SOURCE :Kaalaimani.com