டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள இந்தியா- நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-17 13:08 GMT

டிஜிட்டல் பொருளாதரத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-

தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் பொருளாதரத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருப்பது இந்தியா தான். டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் பணப்பரிமாற்றத்திற்கு மட்டுமின்றி கொரோனா காலகட்டத்தில் மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகளில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது .கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்துக்கான எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் பலதரப்பட்ட பாகுபாடுகள் இருந்தாலும் அனைத்து தரப்பிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் 'டிஜிட்டல் பப்ளிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்' என்ற தொழில்நுட்பம் .நல்ல முன்னேற்றம் அடைந்த நாடுகளை போல் இந்தியாவும் 2047க்குள் அந்த நிலையை அடைய முடியும் .முன்னேற்றத்தில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட முடியாது .சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். இதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :Dinaboomi

Similar News