பொது நிதி மேலாண்மை அமைப்பு வாயிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் 34 லட்சம் கோடி டெபாசிட் -நிதி அமைச்சர் தகவல்!

பயனாளிகள் வங்கி கணக்கில் ரூபாய் 34 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-04 12:13 GMT

பி.எஃப்.எம்.எஸ் எனப்படும் பொது நிதி மேலாண்மை அமைப்பு வாயிலாக ரூபாய் 34 லட்சம் கோடி அளவுக்கு பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விரிவான செய்தியாவது:-


பி.எஃப்.எம்.எஸ் என்பது இந்திய சிவில் கணக்குகள் சேவை அதிகாரிகளால் அரசின் கணக்குகளை பராமரிக்க பயன்படுத்தப்படும் மேலாண்மை தகவல் அமைப்பு ஆகும் . டி.பி.டி எனப்படும் நேரடி பலன் பரிமாற்றம் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை செலுத்தவும் இந்த அமைப்பு பயன்படுகிறது. சி.ஜி.ஏ எனப்படும் கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பி.எஃப்.எம்.எஸ் அரசின் நிதி நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ளது.


இந்நிலையில் 48-வது சிவில் கணக்குகள் தினத்தை ஒட்டி கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பி.எஃப்.எம்.எஸ் அமைப்பால் எளிதாக்கப்பட்ட நேரடி பலன் பரிமாற்ற நடைமுறை வாயிலாக அரசிடமிருந்து திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூபாய் 34 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. எந்த விதமான குளறுபடிகள் இல்லாமல் நேரடியாக குடிமக்களுக்கு பலன்கள் வழங்கப்படுவதை இந்த நடைமுறை உறுதி செய்கிறது. மாநில அரசுகள் உட்பட 1,081 திட்டங்கள் நேரடி பலன் பரிமாற்றத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Kaalaimani.com

Similar News