அரசின் கொள்கைகளாலும் முடிவுகளாலும் புதிய உச்சத்துக்கு சென்ற நாட்டின் பொருளாதாரம்- பிரதமர் மோடி!
அரசின் கொள்கைகளும் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் இளைஞர்களை பணியில் அமர்த்தும் வகையில் ரோஜ்கார் மேளா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அடிக்கடி பணி நியமன அணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். அந்த வகையில் நாடு முழுவதும் இருந்து சுமார் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆடைகளை நேற்று அவர் வழங்கினார்.இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே பணிநியமனம் பெற்ற பயனாளிகள் சிலருடன் அவர் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது :-
2014 ஆம் ஆண்டு எனது அரசு பதவிக்கு வரும் வரை சமூகத்தின் பெரும் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு இருந்தன. அப்படி ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் அவர்களின் வளர்ச்சியை ஒரு மந்திரமாகவே எங்கள் அரசு ஏற்றுக் கொண்டது. பல பத்தாண்டுகளாக எந்த அரசிடம் இருந்தும் எந்த வசதியும் பெறாதவர்களை வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று உறுதி கொண்டது. அவர்களது வாழ்க்கை மாற்றுவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். அதே அதிகாரத்துவம் மற்றும் அமைப்புதான் நடைமுறையில் உள்ளது.ஆனால் மனநிலை மற்றும் பணி கலாச்சாரம் மாறி மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமை கோட்டுக்கு மேலே கொண்டுவரப்பட்டு உள்ளனர். இந்திய பொருளாதாரத்தை குறித்து பல சர்வதேச நிறுவனங்கள் நேர்மறையான தரவுகளை வெளியிட்டுள்ளன. வரவிருக்கும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்வதற்கான மகத்தான சாத்திய கூறுகளுக்கு இதுவும் ஒரு சான்றாகும். லட்சக்கணக்கான கோடிகள் செலவில் விரைவு சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே வழித்தடங்கள் உட்பட நவீன உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.