கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது உண்மையா?
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய முதலிருந்தே சமூக வலைத்தளங்களில் பல போலி மற்றும் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் இதுபோன்று பரப்பப்படும் செய்திகள் சிலவற்றில் அரசாங்கத்தின் பெயரையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.
அதே போன்று ஒரு வைரல் செய்தியாக தற்போது அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மற்றும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிதாகத் தோன்றியுள்ள வகை குறித்தும் சுகாதாரத் துறை அமைச்சகம் விரிவாக வெளியிட்டுள்ள அறிக்கை என்று வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த செய்து குறித்துக் கண்டறிந்த உண்மை கண்டறியும் குழுவான PIB, இதனை மறுத்து மற்றும் இது தவறாகப் பரப்பப்பட்டு வரும் செய்தி, இதுபோன்று ஒரு அறிக்கையை வெளியிடப்பட வில்லை என்று டிவிட்டர் பக்கத்தில் கூறியது. "சுகாதாரத் துறை அமைச்சகத்தால் எந்த செய்தி அறிக்கையும் வெளியிடப்படவில்லை," என்று கூறியது.
இதுபோன்ற செய்திகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மக்களைப் பல முறை அரசாங்கம் மற்றும் பல்வேறு அதிகாரிகள் எச்சரித்து வந்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் வரை இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் புதிதாக உருவெடுத்த வகை தொடர்பாக வெளிவந்த செய்தி சோதனை மேற்கொள்வதில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது மற்றும் தற்போது செய்து வரும் சில சோதனைகள் துல்லியம் குறித்தும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
source: https://www.oneindia.com/amphtml/fact-check/fact-check-this-viral-message-on-coronavirus-variant-has-not-been-issued-by-the-health-ministry-3244987.html