மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தலைவர் வீட்டில் பணக்கட்டுகள் பறிமுதல் செய்ததாக வைரலாகும் பழைய புகைப்படம்!

Update: 2021-04-17 07:01 GMT

தற்போது மேற்கு வங்காளத்தில் தேர்தல் சமயம் என்பதால் இணையதளங்களில் மற்றும் ஊடகங்களில் பல்வேறு கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது குவிந்து கொண்டிருக்கின்றது. அதே போன்று சமீபத்தில் ஒரு புகைப்படம் வலம்வந்து கொண்டிருக்கின்றது.


அதில் மேற்கு வங்காளத்தில் ஒரு பா.ஜ.க தலைவரின் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி அடுக்கடுக்காக பணம் குவிந்ததிருப்பது போல் காணப்பட்டது. மேலும் அந்த புகைப்படத்தில் சில காவலதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் இருப்பதும் இருந்தது.

சில பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயனாளர்கள் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தலைவரின் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை அவர் ஏழைகளுக்கு உதவ வைத்திருக்க வேண்டும்," என்ற கேலி குற்றச்சாட்டுடன் பகிரப்பட்டது.


இதுகுறித்து இந்தியா டுடே பார்வையிட்டபோது, இது 2019 இல் தெலங்கானாவில் போலி பண மோசடி தொடர்பாக ஐந்து பேரைக் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்த போது எடுக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. போலி பண கட்டுகள் 6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தலைவரின் வீட்டில் பணம் பறிமுதல் செய்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

வைரல் புகைப்படம் 2019 இல் பல்வேறு செய்தி தளங்களில் காணப்பட்டது. அதே புகைப்படம் பைனாசியால் எக்ஸ்பிரஸ் மற்றும் ANI போன்ற செய்தி நிறுவனங்களிலும் காணப்பட்டது.


எனவே தற்போது வைரலாகி வரும் புகைப்படம் தற்போதைய இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. மேலும் இதே புகைப்படம் கடந்த ஆண்டில் குஜராத்தில் RSS தொண்டரைக் குற்றம் சாட்டி பகிரப்பட்டிருந்தது.


source: https://www.indiatoday.in/fact-check/story/fact-check-this-huge-stack-of-cash-was-not-found-at-the-house-of-a-bengal-bjp-leader-1791428-2021-04-15

Similar News