பத்திரிகையாளர் பிரக்யா மிஸ்ரா கொலை செய்யப்பட்டதாகத் தவறாக வைரலாகும் வீடியோ!

Update: 2021-04-19 13:35 GMT

சமூக வலைத்தளங்களில் தற்போது பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் பெண்மணியை கொலை செய்வது, அதனைச் சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்ப்பது போன்று ஒரு வீடியோ தவறான குற்றச்சாட்டுடன் வலம்வருகின்றது. அதில் கொலை செய்யப்பட்டவர் பத்திரிகையாளரான பிரக்யா மிஸ்ரா என்றும் அவர் கொரோனா வைரஸின் சகாப்த்ம் கும்பமேளா என்று குறித்துப் பேசியதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


ஆனால் தற்போது வலம்வரும் இந்த புகைப்படம் பிரக்யா மிஸ்ராவுடையது இல்லை. அது நீஹ்லு மேத்தா உடையது ஆகும்.

இந்த வைரல் வீடியோ குறித்துப் பல செய்தி தளங்களில் நியூஸ்மீட்டர் சோதனை நடத்தியது. எனினும் அந்த வீடியோ டெல்லியில் புத்த விஹார் நகரில் வைத்து 25 முறையை அந்த பெண்மணி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதாக அனைத்து செய்தி அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது.

காவல்துறை பாதிக்கப்பட்ட 26 வயது பெண்மணி நீலு மேத்தா என்று கண்டறிந்தது. இவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் சந்தேகப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.


இதே வீடியோ NDTV, ரிபப்லிக் வேர்ல்ட் உள்ளிட்ட செய்தி ஊடகத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே அந்த வீடியோவில் வரும் பெண்மணி பத்திரிகையாளர் பிரக்யா மிஸ்ரா என்று கூறப்படுவது தவறான குற்றச் சாட்டாகும்.


மேலும் இந்த வைரல் வீடியோ பிரக்யா மிஸ்ரா இறந்து விட்டதாகக் கூறுகின்றது. ஆனால் இவர் சம்பவம் நடந்தாக குறிப்பிடும் தேதி முதல் மிஸ்ரா டிவிட்டரில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இதுகுறித்து உறுதி செய்யப்படும் உள்ளது. சமீபத்தில் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுக்குகள் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது.

source: https://newsmeter.in/fact-check/fact-check-budh-vihar-murder-video-falsely-claims-to-show-murder-of-reporter-pragya-mishra-677085

Similar News