மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரம் குறித்து பா.ஜ.கவிற்கு எதிராக மட்டும் போலி குற்றம் சாட்டும் துருவ் ரத்தீ!
தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மக்களைப் பணயம் வைப்பதாக வெறும் பா.ஜ.க குற்றம் சாட்டி கூறியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் வாக்காளர் துருவ் ரத்தீ.
தனது பேஸ்புக் இடுக்கில், "ராகுல் காந்தி மற்றும் மம்தா பனர்ஜீ தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டனர். ஆனால் மோடியும்,ஷாவும் மக்களில் வாழ்வில் விளையாண்டு வருகின்றனர்," என்று குற்றம்சாட்டிக் கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலி செய்திகளை பரப்பியதற்காக துருவ் ரத்தீ மேல் வரலாற்றுப் பக்கங்கள் உள்ளன.
மேலும் பா.ஜ.க வை தவிர அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டதா என்பதைச் சரிபார்க்க, மம்தா டிவிட்டர் பக்கத்திற்குச் சென்ற போது அவரது தேர்தல் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு தென்பட்டது. இதன் மூலம் எளிதாக துருவ் ரத்தீ குற்றச் சாட்டு ஒரு புறம் முறியடிக்கப் பட்டது. நேற்று மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா ஆயிரக்கணக்கான தனது தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
மேலும் பொது ஊடகங்களில் நேரடி பிரச்சாரத்தைத் தவிர்ப்பதன் மூலம் எவ்வாறு திரிணாமூல் பொது ஆய்வில் இருந்து தப்பிக்கிறது என்பதையும் இதன்மூலம் அம்பலமானது. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகத்துக்கு மம்தா கடிதம் எழுதியிருந்தாலும், அவரது பேஸ்புக் இடுக்கு, தேர்தல் பிரச்சாரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வீடியோ குவிந்துள்ளது.
மேலும் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தின் ஐந்தாம் கட்ட தேர்தலுக்காகப் பெரியளவிலான தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியது குறிப்பிட தக்கத்து. தேர்தல் பிரச்சாரம் கட்சிக்குப் பெரிதும் உதவாது என்பதை உணர்ந்து பிரச்சாரத்தை நிறுத்த முடிவு செய்தார். தலைவரின் உத்தரவு இருந்தபோதிலும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இது காங்கிரஸ் தலைவர் பிரச்சாரத்தை நிறுத்தியதாக துருவ் ரத்தீ கூற்றுக்கு எதிரானது.