தற்போது மீண்டும் பெருமளவில் பரவ தொடங்கியுள்ள கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றால் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக ஒரு ஊடக செய்தி வைரலாகி வருகின்றது.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் 2.5 மேலாகத் தொற்று எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில் இந்த வைரல் செய்தி பரவ தொடங்கியுள்ளது. தொற்று அதிகரிப்பின் காரணமாக சில மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கும் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் உண்மை கண்டறியும் குழுவான PIB, தொற்று அதிகரிப்பின் காரணமாக மத்திய அரசு முழு ஊரடங்கு விதிக்கவுள்ளது என்ற செய்தியை ரத்து செய்தது.
"கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு தழுவிய முழு ஊரடங்கு மத்திய அரசாங்கம் விதிக்கவுள்ளது என்ற அறிக்கை பரவி வருகின்றது. இது தவறானது," என்று PIB ட்விட்டில் தெரிவித்தது.
இதற்கிடையில் மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்த கொரோன தொற்று பாதிப்பு 1.50 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைக்கு இடையில் இந்தியாவில் 2.73 லட்சம் பேர் புதிதாக பாதிப்படைந்தனர்.
source: https://zeenews.india.com/india/centre-to-announce-nationwide-lockdown-to-curb-spread-of-covid-19-pib-fact-check-here-2356109.html