கொரோனாவால் ஆக்சிஜென் சிலிண்டருடன் மருத்துவமனைக்கு வெளியே பெண்மணி - வைரல் புகைப்படம் உண்மையா?

Update: 2021-04-22 08:30 GMT

மக்களிடையே பதற்றத்தை மேலும் ஏற்படுத்த இந்த கொரோனா தொற்று காலத்தில் போலி செய்திகள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வருகின்றது.


தற்போது ஒரு புகைப்படத்தில்ஒரு பெண்மணி மருத்துவமனைக்கு வெளியே ஆக்சிஜென் சிலிண்டருடன் அமர்த்திருப்பது போன்று பரப்பப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படம் தற்போதைய கொரோனா நிலைமையைச் சுட்டிக்காட்டி தவறான குற்றச்சாட்டுடன் வலம்வருகின்றது.

இந்த புகைப்படம் குறித்து நியூஸ்மீட்டர் பார்த்த போது இந்த புகைப்படம் உண்மையில் உத்தரப் பிரதேசத்தில் 2018 இல் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உண்மையில் தனது நோய்வாய்ப்பட்ட தாயின் முதுகில் கட்டப்பட்டிருந்த ஆக்சிஜென் சிலிண்டருடன் ஆம்புலன்ஸ்காக காத்திருந்த போது எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ ஒன்றையும் ANI யூடியூபில் பதிவிட்டுள்ளது. செய்தி அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட பெண்மணி அங்குறி தேவி என்றும் அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சைக்குப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நிலைமை சீர் அடைந்ததால் ஜெனரல் வார்டுகு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கு காத்திருக்கையில் எடுக்கப்பட்டுள்ளது.

Full View

இருப்பினும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடிந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை மேற்கொண்டது.


இந்த சம்பவமானது ஏப்ரல் 2018 இல் நடந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு தற்போதைய கொரோனா சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தவறாகப் பரப்பப்பட்டு வருகின்றது.

source: https://newsmeter.in/fact-check/fact-check-photo-of-woman-sitting-outside-hospital-with-oxygen-cylinder-not-related-to-covid-19-pandemic-677190

Similar News