வெங்காயத்துடன் உப்பைச் சேர்த்துச் சாப்பிட்டால் கொரோனா குணமாகும் - வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-04-22 13:13 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்துள்ளது. மருத்துவமனை நிறுவனங்களில் உள்ள மருத்துவர்கள் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை அடுத்துப் பல ஆயுர்வேத மருத்துவர்களும் பல்வேறு வீட்டு முறைகளையும் பரிந்துரைத்துள்ளனர்.


இதுதவிர, தற்போது கொரோனா தொற்றுக்காக ஒரு மருத்துவ குறிப்பு சமூக வலைத்தளத்தில் வலம்வருகின்றது. அதில் ராக் சால்ட்டுடன் வெங்காயத்தைச் சேர்த்து உட்கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது. இது ஒரு ஆடியோ வடிவில் மற்றும் புகைப்படம் வடிவில் வலம்வருகின்றது.

இதுகுறித்து இந்தியா.காம் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதற்கான அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேடிய போது இதுபோன்ற செய்தி கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து PIB உண்மை கண்டறியும் குழுவும் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது, மேலும் சமூக வலைத்தளங்களில் கொரோனா தொற்று குறித்த தீர்வுகள் போலியானது என்று டிவிட்டரில் தெரிவித்தது.


எனவே தற்போது வலம்வரும் கூற்றுத் தவறானது. வெங்காயத்துடன், ராக் சால்ட்டை சேர்த்துச் சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை

source: https://www.india.com/health/fact-check-do-onions-with-salt-cure-covid-19-heres-the-truth-4603792/

Similar News