முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மரணம் என்று போலி செய்தியைப் பரப்பிய காங்கிரஸ் தலைவர்.!

Update: 2021-04-24 01:30 GMT

வியாழக்கிழமை இரவு அன்று காங்கிரஸ் தலைவர் ஷாஷி தாரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போலி செய்தியைப் பதிவிட்டார். அதில் முன்னாள் மக்களவை சபாநாயகருமான மற்றும் பா.ஜ.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமித்ரா மகாஜன் மரணம் குறித்துக் கூறியிருந்தார்.


அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மரணம் குறித்து வருத்தமடைகிறேன். அவருடனான பல நினைவுகள் எனக்கு உள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.




 இவருடைய டிவிட்டை தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் இரங்கலை சுமித்ரா மகாஜன்கு தெரிவிக்கத் தொடங்கினர். NCP தலைவர் சரத் பவார் மற்றும் அவருடைய மகள் சுப்ரியா சூலே ஆகியோரும் தங்கள் இரங்கலைப் பதிவிட்டுள்ளனர்.






 



 இதுதவிர ஷாஷி தாரூர் இறந்ததாகப் பதிவிட்ட கதையை இந்துஸ்தான் டைம்ஸ் தனது வலைத்தளத்தில் பதிவிட்டது. ஷாஷி தாரூர் பா.ஜ.க தலைவர் உயிரிழந்ததாகப் பதிவிட்ட சில மணி நேரத்தில், கைலாஷ் விஜய்வர்கியா தனது டிவிட்டர் பக்கத்தில், "சுமித்ரா மகாஜன் ஆரோக்கியமாக உள்ளதாகவும். அவருக்கு நீண்ட ஆயுளைக் கடவுள் வழங்குவார்," என்று பதிவிட்டார்.

தனது கவனக்குறைவை அறிந்த உடனே ஷாஷி தாரூர், "நன்றி கைலாஷ் நான் டிவிட்டை நீக்கிவிட்டேன். மக்களிடையே இதுபோன்ற தீய செய்திகளைப் பரப்புவது எது என்பது குறித்து ஆட்சிரியமளிக்கிறது. சுமித்ரா நீண்ட ஆயுள் பெற நான் வாழ்த்துகிறேன்,"என்று குறிப்பிட்டார்.

ஷாஷி தாரூர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தனது தாயார் மரணம் குறித்து போலி செய்தியைப் பரப்பியதற்கு, சுமித்ரா இளைய மகன் வெள்ளிக்கிழமை காலை மந்தர் மகாஜன் பதிலளித்தார். அவர் ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார், எனது தாயாரின் உடல்நிலை சீராக உள்ளது. நேற்று மாலை அவரை சந்தித்தேன் என்று கூறியிருந்தார்.



இதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுமித்ரா மகாஜன் மரணம் குறித்துப் பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவரின் டிவிட்டை அடிப்படையாக வைத்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


source: https://www.opindia.com/2021/04/shashi-tharoor-media-fake-news-death-ex-lok-sabha-speaker-sumitra-mahajan/

Similar News